இங்கிலாந்தில் வணிக வளாகங்களை மீண்டும் திறப்பதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் அனுமதி வழங்கிள்ளார்.
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பால் தற்போது வரை 45 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்தைக் கடந்துள்ளது. இது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் பொருளாதாரத்தை மீட்க வேண்டிய காரணத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இங்கிலாந்தில் வணிக ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் வணிக வளாகங்கள், கேசினோக்கள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிகரித்து காணப்பட்ட கொரோனா தொற்று தற்போது சற்று குறைந்து வருவதால் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் கொரோனா பரவல் தடுப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.