தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களில் மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,355 ல் இருந்து ஆக 3,26,245 ஆக அதிகரித்தது. 5,556 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,67,015 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,716 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 1,187 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை 1,14,260 பேர் பாதிக்கப்பட்டு, தற்போது 11,209 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 117 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு 5,514 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 68,301 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 34,43,897 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 53,716 ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு :
சென்னை-1,187
திருவள்ளூர்-495
செங்கல்பட்டு- 437
கோவை-385
தேனி-367
காஞ்சிபுரம்- 315
கடலூர்-221
சேலம்-191
ராணிப்பேட்டை-178
வேலூர்-178
புதுக்கோட்டை-155
திண்டுக்கல்-138
குமரி-128
ஈரோடு-128
விழுப்புரம்-127
நெல்லை-117
விருதுநகர்-90
திருச்சி-106
தென்காசி-93
தஞ்சை-88
தி.மலை-81
சிவகங்கை-70
அரியலூர் -69
திருப்பத்தூர்-63
தூத்துக்குடி-60
ராமநாதபுரம்- 57
திருவாரூர்- 56
திருப்பூர்-53
மதுரை-46
தர்மபுரி -39
நாகை-34
நாமக்கல்-30
க.குறிச்சி-30
பெரம்பலூர்-24
நீலகிரி – 18
கரூர்-14
கிருஷ்ணகிரி-12