தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகின்றது..இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன.. இதையடுத்து 1ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. தற்போது மாணவர்கள் அனைவரும் வீட்டில் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது