Categories
உலக செய்திகள்

லடாக் எல்லையில் விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வு ….!!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சூழலை விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர்.  படைவீரர்களின் தயார் நிலையையும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்வதற்கு முன்பாக மிக்-21 பைசன் ரக போர் விமானம் தலைமை தளபதி RKS. பாதோரிய இயக்கினார்.

ரஷ்யாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட மிக்-21 போர் விமானங்கள் பல்வேறு இக்கட்டான தருணங்களை இந்திய விமானப்படை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. லடாக் பகுதி வட இந்திய பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகளை விமானப்படையின் மேற்கு படைப்பிரிவு மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |