Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷ ராசிக்கு…மரியாதை உயரும்…வீண் அலைச்சல் உண்டாக்கும்…!

மேஷ ராசி அன்பர்களே …!    இன்று அரசு பணியில் பதவி உயர்வு, பண வரவு போன்றவை இருக்கும். இனிய பேச்சு சாதுரியத்தால் எடுத்த காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். வியாபாரிகளுக்கு இன்று பேச்சு மௌனமாக இருக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அது சரியாகிவிடும்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களுக்கு இடையே மதிப்பும் மரியாதையும் உயரும். வீண் அலைச்சல் இருக்கும். மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கும். கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் இன்று நீங்கும். நீண்ட தூர பயணங்களால் லாபமும் உண்டாகும். சொத்து விவகாரங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். முன்னேற்றம் கூடும் நாளாக இருக்கும்.

காதலர்களுக்கும் சிறப்புமிக்க நாளாக இருக்கும். திருமண வரவேற்பு காத்திருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |