அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகயில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மற்றும் புறநகரில் மேகமூட்டத்துடன் வானம் காணப்படும் எனவும், ஒரு சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை தென்மேற்கு மற்றும் மத்திய வடக்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.