விருச்சிக ராசி அன்பர்களே…! இன்று பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாகவே இருக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் மனதில் உற்சாகம் பொங்கும். தொழில் விரிவாக்கத்துக்கு வங்கி கடன்கள் சுலபமாக கிடைக்கும். ஞாபக மறதியால் தொல்லைகள் அதிகம் ஆகலாம். விருந்து, கேளிக்கைகளில் மனம் செல்லும். பெண்கள் கோபத்தை குறைத்துக் கொள்வது ரொம்ப நல்லது. மிக முக்கியமாக சமையல் செய்யும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும்.
உச்சத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை, இடமாற்றம், அலைச்சல் போன்றவை இருக்கக் கூடும். தடைபட்டிருந்த பணம் கையில் வந்து சேரும். குடும்பத்தில் அமைதி நிலவுவதற்கு குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்ல வேண்டும். கணவன் மனைவிக்கு இடையே மன வருத்தம் கொஞ்சம் உண்டாகலாம். எதையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது. அதேபோல அக்கம்பக்கத்து இன்னும் கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத வாக்குவாதங்களில் ஏதும் செய்ய வேண்டாம்.
இன்று காதலர்களுக்கு ஓரளவே இனிமை காணும் நாளாக இருக்கும். கூடுமானவரை கோபமான பேச்சை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நிதி நிலைமையில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். பண பரிவர்த்தனையில் மிக மிக கவனம் கொள்ளுங்கள். மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். கூடுமானவரை வாகனத்தில் செல்லும் போது பொறுமையாக செல்லுங்கள். வாக்குறுதிகளை முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு அது சத்தைக் கொடுக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: இளம் மஞ்சள் மற்றும் நீல நிறம்.