ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதம் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அடுத்தடுத்து தொடர்ந்து தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அள்ளி குவித்து வருகிறது. ஏற்கனவே தங்களது நிறுவனம் சார்பில் பல பொருட்களையும், சேவைகளையும் ரிலையன்ஸ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதன் சார்பு கம்பெனியான ஜியோ நிறுவனம் தனது jiofi வாடிக்கையாளர்களுக்கு ஐந்து மாதங்களுக்கு அன்லிமிடெட் ஆன்நெட் அழைப்புகள் மற்றும் டேட்டாக்களை வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. இதற்கு jiofi வாடிக்கையாளர்கள் ரூபாய் 199, 249 அல்லது ரூபாய் 349 என ஏதாவது ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த ஆஃபர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.