பாம்பு ஒன்று அசையாமல் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
பாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக சிறிதும் வளையாமல் நெளியாமல் நேராகச் சென்ற காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. ஒரே நேர்கோட்டில் சென்றுகொண்டிருக்கும் பாம்பின் காணொளி பல்லாயிரக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்த இணையவாசிகள் பலரும் பலவிதமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதில் ஒருவர் “இது தாம்பா சவுகரியமா இருக்கு” என கமெண்ட் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதோடு ஒரே நேர்கோட்டில் தசைகளை அசைத்து அதன் உதவியோடு முன்னேறி செல்வதை பார்த்தால் கம்பளிப்பூச்சி தன்மையை போன்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
https://twitter.com/thescicademy/status/1260665483424079873