சிறுவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து சிறை தண்டனை அனுபவித்து வந்த நபர் சிறையிலேயே மரணம் அடைந்துள்ளார்
New Brunswickl-ல் இருக்கும் சிறையில் டொனால்ட் என்ற குற்றவாளி மரணமடைந்துள்ளார். அவர் மீது 30 வருட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றது. அவர் குறிப்பாக குழந்தைகள், சிறுமிகள் மற்றும் இளம் பெண்களிடம் தவறாக நடந்து கொண்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அதன் பிறகு 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அதற்குப் பிறகும் அவர் ஆன்லைன் மூலம் சிறுவர்களிடம் தவறாக பேசிய குற்றத்திற்கு கைது செய்யப்பட்டார். 2019 ஆம் வருடம் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீன் கோரிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருந்தது. இந்நிலையில் டொனால்ட் இயற்கையாக மரணம் அடைந்துள்ளார் என கனடாவின் கரக்ஷனல் சர்வீஸ் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.