குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை தந்தை சூப்பர்மேனாக பறந்து சென்று தடுத்த காணொளி வைரலாகி வருகிறது
சீனாவில் தந்தை ஒருவர் தனது இரண்டு குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு குழந்தை பந்தை மேல் தூக்கிப் போட்டு அதைப் பிடிக்க முயற்சித்தபோது ஆளுயர கண்ணாடியை தட்டிவிட அது கீழே படுத்திருந்த குழந்தை மீதுவிழ போனது. இதைப் பார்த்த தந்தை விரைந்து சென்று குழந்தை மீது விழ இருந்த கண்ணாடியை பிடித்து கண்ணாடியும் குழந்தையும் ஒருசேர காப்பாற்றிவிட்டார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கடந்துள்ளது இதனைப் பார்த்த பலரும் தந்தையின் சமயோஜித புத்தியை பாராட்டி சூப்பர்மேன் அப்பா என பெயர் வைத்துள்ளனர்