சுதந்திர தின விழாவில் கொடியேற்றிய பின்பு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசினார். அதில், கொரோனா தொற்று பரவல் நிலையில் தற்சார்பு இந்தியாவை உருவாக்க, 130 கோடி இந்தியர்களும் உறுதி அளித்துள்ளனர். விண்வெளித்துறையை, தனியாருக்கு திறந்துவிடுவது போன்ற நடவடிக்கைகள், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் மற்றும் அவர்களின் திறமைகளையும், ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ள மேலும் வழிவகுக்கும்.
கொரோனா தொற்று காரணமாக, முதல்முறையாக குழந்தைகள் இல்லாமல் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. தியாகம் செய்வதற்கு இந்தியர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள், இந்தியாவின் ஒற்றுமை உலகிற்கே முன்னுதாரணம். பன்முகத் தன்மையே நமது நாட்டின் பலம், இதனை ஆங்கிலேயர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள்
கொரோனா காலத்தில் எண்ணிலடங்காத வென்டிலேட்டர்களை இந்தியாவில் உருவாக்கியிருக்கிறோம். மக்கள் மனதில் நிலைக்க வேண்டியது, உள்நாட்டு பொருட்கள், உள்நாட்டு முன்னேற்றம். வங்கிகளின் ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாய கடன்களை எளிதாக வழங்க முடியும். ரூ 1.10 லட்சம் கோடி செலவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்று பிரதமர் பேசினார்.