Categories
தேசிய செய்திகள்

“சுதந்திர தினம்”… நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து… !!

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்!” என்று பதிவிட்டுள்ளார்.

 

Categories

Tech |