சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள சலால் அணை தேசிய கொடியின் நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் 74-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி கொண்டாடப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல முக்கிய பகுதிகள் முழுவதும் மின் விளக்குகள் கொண்டு அலங்கரிக்கபட்டு இருக்கின்றன. சுதந்திர தினம் சிறப்பாக அமைய நாடு முழுவதும் பேருந்து, ரயில், விமான நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது.
மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு சோதனைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் கட்டப்பட்டுள்ள சலால் அணை தேசிய கொடியின் மூன்று நிறங்களும் அடங்கியவாறு வண்ண விளக்குகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.
#WATCH Jammu and Kashmir: Salal Dam in Reasi district illuminated in tricolour on the eve of 74th #IndependenceDay. pic.twitter.com/lZTduFBdtI
— ANI (@ANI) August 14, 2020