Categories
திண்டுக்கல் மாநில செய்திகள்

சுதந்திர தினம்… “பழனி கோவில்”… துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு..

சுதந்திர தினத்தை முன்னிட்டு பழனி கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருடம் வரை சுதந்திர தினத்தில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் நாட்டின் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தப்படும். மேலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய கோவில்கள், தேவாலயம், பஸ், ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.
ஆனால் இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றி சுதந்திர தினவிழாவை கொண்டாட வேண்டிய  நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்களுக்கு வழக்கமான பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதன்படி தமிழகத்தின் முக்கிய கோவில்களில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நேற்று பாதுகாப்பு போடப்பட்டு, கோவிலின் தங்ககோபுரம், ராஜகோபுரம், வெளிப்பிரகாரம் போன்றவற்றை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் பழனி கோவிலின் உப கோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில்களிலும் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்பட்டது. மேலும் பழனி ரெயில் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |