சுதந்திர தின விழாவையொட்டி தலைநகர் டெல்லியில் முக்கிய கட்டங்களில் பிரம்மாண்டமான மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.
74-ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ராஷ்டிரபதி பவன் நாடாளுமன்றக் கட்டடம், இந்தியாகேட் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் மூவர்ண மின் விளக்குகளால் ஜொலித்தன. நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடம் சுதந்திர தின உரை நிகழ்த்தினார்.
இன்று நடக்கவுள்ள விழாவில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார். இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தலைமைச் செயலகங்கள் ஆளுநர் மாளிகை கட்டடங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தன.