கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்கவும் ஊர்வலம் செல்லவும் அனுமதி கிடையாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கர்நாடக தலைமைச் செயலாளர் டி.எம்.விஜய்பாஸ்கர் கொடுத்துள்ள செய்திக்குறிப்பில், வரும் 22-ஆம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொரோனா தொற்று பரவல் காரணமாக பொதுமக்கள் எளிமையாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பொது இடங்களிலோ, வீடுகளுக்கு முன்போ பெரிய அளவிலான விநாயகர் சிலை வைக்கக்கூடாது எனவும், மக்கள் தங்களது வீடுகளுக்குள் வைத்து வழிபடும் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்செல்லாமல் தங்களது வீடுகளிலேயே கரைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கர்நாடக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.