கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு முழு நாடும் தலை வணங்குவதாக குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர இந்தியாவின் குடிமகன்கள் என்பதில் இளைஞர்கள் பெருமை கொள்ள வேண்டும் என அப்போது தெரிவித்தார். இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டார். தற்போது உலகம் பெரும் தொற்றான கொரோனா வைரஸை எதிர்கொண்டு உள்ளதாகவும். இந்த வைரஸ் பல உயிர்களைப்பலி கொண்டதோடு இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப்போட்டதாக தெரிவித்துள்ளர்.
கொரோனா தாக்கத்தால் ஏழை எளிய மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டரர். மேலும் கொரோனாவை எதிர்த்து போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட களப்பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க தேசம் கடமைப்பட்டுள்ளது என்றும். கல்வான் பள்ளத்தாக்கில் உயிர்நீத்த வீரர்களுக்கு ஒட்டுமொத்த நாடும் தலை வணங்குவதாகவும் தெரிவித்தார்.