மூத்த அமைச்சர்களுடன் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், போஸ்டர் கிழிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அதிமுகவில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது.. இது தமிழகத்தில் பேசு பொருளாகி வருகிறது.
இந்த நிலையில் தேனி மாவட்டத்தின் பல இடங்களில் ‘அடுத்த முதல்வர் ஓபிஎஸ்’ என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தேனி பெரியகுளம் தென்கரையில் ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது..
இதனிடையே மூத்த அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் சிவி சண்முகம், செங்கோட்டையன், ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு உள்ளிட்டோருடன் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தற்போது அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருபக்கம் போஸ்டர் கிழிக்கப்பட்டு வருகிறது.. மறுபக்கம் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக்குப்பின் முதல்வர் பழனிசாமியை அமைச்சர்கள் சந்திப்பார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.