மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருக்கும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் எஸ்.பி பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், பிரார்த்தனை செய்து வருகின்றனர். இசை ரசிகர்கள் அனைவரும் என்னுடன் சேர்ந்து இந்த லெஜெண்ட்டுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
எஸ்.பி பாலசுப்பிரமணியம் தன் அருமையான குரலால் நமக்கு இன்பத்தை கொடுத்துள்ளார் என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இதேபோல் நடிகர்கள் தனுஷ், பிரசன்னா, கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்ட பிரபலங்களும் எஸ்.பிபி குணமடைய ட்விட்டரில் பதிவிட்டு இருக்கின்றனர், எஸ்.பி பாலசுப்ரமணியம் குணமடைந்து வீடு திரும்புவார் என்று ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.