Categories
தேசிய செய்திகள்

“மராட்டி பேசும் மக்களை ஒன்றிணைக்க வேண்டும்”… உத்தவ் தாக்கரே வேண்டுகோள்…!!

கா்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் வாழும் பகுதிகளை சேர்க்கும் வரையில் ஒன்றுபட்ட மராட்டியம் முழுமை அடையாது என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேயால் ஆரம்பிக்கப்பட்ட ‘மார்மிக்’ என்ற வார இதழின் 60-வது ஆண்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பங்கேற்றார். இந்த விழாவில் அவர் பேசுகையில்: “மும்பையில் மராத்தி பேசும் மக்களின் உரிமைகளுக்காக போராட சிவசேனா தொடங்கப்பட்டதற்கு காரணமே இந்த இதழ் தான். இந்த இதழ் விரைவில் டிஜிட்டல் வடிவிலும் வெளியிடப்பட உள்ளது. ஓவிய கலைஞரான எனது தந்தைக்கு பிரஷ் தான் ஆயுதம். அவர் மராத்தி பேசும் மக்களின் பிரச்சினைகளையும், புலம்பெயர்ந்தவர்களால் மண்ணின் மைந்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் அவரது கேலி சித்திரங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.

எனது அரசு, மண்ணின் மைந்தர்களுக்கு இடஒதுக்கீட்டையும், பாடத்திட்டத்தில் மராத்தியையும் கட்டாயமாக்கியது. மார்மிக் சிவசேனாவை உருவாக்கியது. இப்போது அந்த கட்சியில் இருந்து முதலமைச்சர் உங்களுக்கு கிடைத்து இருக்கிறார். கா்நாடகாவில் மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் பகுதிகளை ஒன்றிணைக்கும் வரையில் ஒன்றுபட்ட மராட்டியம் முழுமை அடையாது. பால்தாக்கரே, ஆா்.கே. லெட்சுமணுக்கு பிறகு அரசியல் நடப்புகளை கூறும் கேலி சித்திரங்கள் குறைந்து வருகிறது. செய்தி பிரிவால் கூற முடியாத கருத்துகளையும் அவர்களின் கேலி சித்திரம் விளக்கிவிடும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |