சுதந்திர தினத்தையொட்டி தமிழக ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நாட்டின் 74 ஆவது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலக அரங்கில் இந்தியா இன்று வெற்றி நடைபோட்டு வருவதாகவும், தனித்துவம் மிக்க அரசியல் தலைமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பண்பாடு கலாசாரத்தின் பயனாக, உலக நாடுகளின் மத்தியில் இந்தியா மதிப்பு மிக்க நாடாக திகழ்கிறது.
பொதுமக்களுக்கு இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் என்று ஆளுநர் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நம் நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீர சரித்திரங்களை நினைவுகூர்ந்து அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.