Categories
உலக செய்திகள்

நியூசிலாந்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு…12 நாட்கள் ஊரடங்கை நீடித்த பிரதமர்…!!!

நியூசிலாந்தில் கொரோனாவில் இரண்டாவது அலை பரவத் தொடங்கி இருப்பதால் பிரதமர் ஜெசிந்தா ஊரடங்கை மேலும் 12 நாட்கள் வரை நீடித்துள்ளார்.

 

உலகில் கொரோனா பாதிப்பு குறைவான நாடுகளில் நியூசிலாந்து ஒன்றாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவத் தொடங்கியதால் தேசிய அளவில் எச்சரிக்கை விடப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பயனாக கொரோனாவில் இருந்து முழுவதுமாக விடுபட்டு விட்டோம் என்று பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்திருந்தார். அப்போது நியூசிலாந்தில் 1122 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். மேலும் 19 பேர் உயிரிழந்திருந்தனர். அதன் பிறகு 102 நாட்களுக்கு பின்னர் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து நகரில் மீண்டும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு உறுதியானவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

 

அதுமட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் நியூசிலாந்தின் தற்போது புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதனால் பாதிப்பு எண்ணிக்கை 1251 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இதுகுறித்து அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா கூறும் போது, ” கொரோனா தோற்று எங்கிருந்து பரவியது என்பது பற்றிய விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதுபற்றி தெளிவான தகவல் எதுவும் தெரியவில்லை. கொரோனாவால் பாதிப்படைந்த 29 நபர்களும் ஆங்லாந்து நகரை சேர்ந்தவர்கள் என்பதால் அந்தப் பகுதி மையப்புள்ளியாக இருக்கின்றது. அந்த மையப்புள்ளியில் இருந்து இன்னும் பல பாதிப்புகள் வெளிவரும். கொரோனா பாதிப்பு குறைவதற்கு முன்னர் அது கட்டாயம் அதிகரிக்கும். அதனால் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் 12 நாட்கள் வரை நீட்டிக்கப்படுகிறது. இந்தப் 12 நாட்களுக்குள் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து, அவர்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்” என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |