Categories
தேசிய செய்திகள்

கொரோனா பணிகள்… 850 கிலோமீட்டர் வாரம் ஒரு முறை பயணம்.. சுகாதாரத்துறை அமைச்சர்…!!

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வாரம் ஒரு முறை 850 கி.மீ பயணம் செய்து ஏனாம் பிராந்தியம் சென்று வருகிறார்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அவை புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஆந்திராவில் உள்ள ஏனாம் பகுதிகளாகும். அதில் ஏனாம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மல்லாடி கிருஷ்ணாராவ். அவர் புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கிறார்.

இந்த நிலையில் ஏனாம் பிராந்தியத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் மல்லாடி கிருஷ்ணாராவ் சனி, ஞாயிறுகளில் 850 கி.மீ. புதுச்சேரியிலிருந்து ஏனாம் காரில் பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று வருகிறார். அதற்காக 11 மணி நேரம் ஒதுக்குகிறார். வழக்கமாக சென்னையிலிருந்து விமானத்தில் விசாகப்பட்டினம் சென்று அங்கிருந்து காரில் ஏனாம் செல்வார். தற்போது விமான சேவைகள் நிறுத்தப்பட்டு இருப்பதால் அவர் காரில் சென்றுவருகிறார்.

Categories

Tech |