Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிய சிக்னல் முறை அறிமுகம் ….!!

சென்னையில் சோதனை அடிப்படையில் புதிய சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை காந்தி சிலை சிக்னலில் புதிய சிக்னல் முறையை சோதனை முறையில் போலீசார் அமைத்திருக்கின்றனர். ஜப்பான் போன்ற நாடுகளில் இருப்பது போல் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை ஆகிய சிக்னல்கள் விழுந்தால் ஒரு வட்டத்திற்குள் மட்டும் விளக்குகள் எரியாமல் அந்த சிக்னல் கம்பம் முழுவதும் LED விளக்குகள் சிக்னலுக்கு ஏற்றார் போல் எரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது தூரத்திலிருந்து பார்க்கும் போது கூட என்ன சிக்னல்கள் விழுந்திருக்கிறது என்று வாகன ஓட்டிகளுக்கு எளிதாகத் தெரியும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பச்சை நிற சிக்னல் விழுந்தால் GO என்ற அறிவிப்பு பலகை, ஆரஞ்சு நிற சிக்னல் விழுந்தால் lesson என்ற அறிவிப்பு பலகையும், சிவப்பு நிற சிக்னல் விழுந்தால் stop என்ற அறிவிப்புப் பலகையும் ஒளிரும் வண்ணம் போடப்பட்டுள்ளது.

சிக்னல் எவ்வளவு நேரம் இருக்கும் என்ற கால அளவு எண்களும் சிக்னலுக்கு ஏற்றவாறு நிறத்தில் எரியும். சோதனை அடிப்படையில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த புதிய சிக்னல் முறை காரணமாக விபத்துக்களை குறைக்கவும்  போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு தடுப்பதற்காகவும் சோதனை அடிப்படையில் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடையே வரவேற்பு பெற்றால் தொடர்ந்து சென்னை முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Categories

Tech |