பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் ஆற்றிய உரையில் சோதனையில் மூன்று தடுப்பூசிகள் உள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி பேசுகையில்,
* கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்களை நாம் நினைத்து பார்க்க வேண்டும்.
* நம் நாட்டிற்காக போராடி வரும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
* தற்போது இருக்கும் நிலையில் இந்தியாவில் 3 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நிலையில் உள்ளன.
* இந்த தடுப்பூசிகளுக்கு விஞ்ஞானிகள் அனுமதி கொடுத்ததும் நாட்டில் மிகப்பெரிய அளவில் இந்த தடுப்பூசிகள் தயாரிக்கப்படும்.
*கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.