அமெரிக்க துணை ஜனாதிபதி போட்டியிடும் கமலா ஹாரிசின் குடியுரிமை பற்றி ஜனாதிபதி டிரம்ப் பிரச்சனை எழுப்பியுள்ளார்.
அமெரிக்காவில் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிட உள்ளார். ஜனாதிபதி தேர்தலுடன் துணை ஜனாதிபதி தேர்தலும் நடக்க இருப்பதால், ஜனநாயக கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை அதிகமாக கொண்டுள்ள கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். தற்போது அமெரிக்க செனட் சபை உறுப்பினராக இருந்து கொண்டிருக்கும் கமலா ஹாரிஸின் தந்தை டெனால்டு ஹாரிஸ்(55) ஜமா அக்காவை சேர்ந்தவர். தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் பிறந்தவர். இவர்களுக்கு கலிபோர்னியாவில் 1964ம் ஆண்டு கமலா ஹாரிஸ் பிறந்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியே அல்லது துணை ஜனாதிபதி தேர்தலில் ஒருவர் போட்டியிட வேண்டும் ஆனால் அவர் அமெரிக்காவில் பிறந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம். அமெரிக்காவில் தற்போது நிறவெறி பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஆப்பிரிக்க – அமெரிக்க பெண்ணான கமலா ஹாரிசை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்ததற்கு முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர். கமலா ஹாரிஸ் வெற்றி கண்டால் அவர் முதல் கருப்பின துணை ஜனாதிபதி என்ற பெருமையை அடைவார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கென்யாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட சமயத்தில் ‘பிர்தர் இயக்கம்’ அவரது அமெரிக்க குடியுரிமை பற்றி பல்வேறு பிரச்சனைகளை கிளப்பியது. இருந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து ஜனாதிபதி தேர்தலில் ஒபாமா வெற்றி கண்டார். தற்போது அந்த இயக்கம் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்ற கமலா ஹாரிஸ் மீது அமெரிக்க குடியுரிமை பற்றி பிரச்சினைகளை கிளப்பி இருக்கிறது. இது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. குடியரசு கட்சியின் சார்பில் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்பிய டாக்டர் ஜான் ஈஸ்ட்மேன் கமலா ஹாரிசிடம் தோல்வியடைந்தார். அவர் ‘நியூஸ் வீக்’ என்ற பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார்.
அந்தக் கட்டுரையில் கமலா ஹாரிஸ் இன் குடியுரிமை பற்றியும் அவர் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதற்கான தகுதி பற்றியும் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்நிலையில் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” கமலா ஹாரிஸ் அமெரிக்க ஜனாதிபதியாக அல்லது துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதி இல்லாமல் போகலாம் என்று சாப்மேன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் ஈஸ்ட்மேன் பத்திரிகையில் கட்டுரை எழுதி இருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அந்தத் தகவல் சரியானது என்றும் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிகள் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு இருக்கின்றதா? என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் பிறந்தவர் ஆக இருந்தால், தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி அவருக்கு கிடையாது. அவர் வேட்பாளராக தேர்வு செய்யும் முன்பு ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரம் பற்றி நன்கு ஆய்வு செய்திருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். கமலா ஹாரிசின் அமெரிக்க குடியுரிமை பற்றி பிரச்சனை கிளம்பி இருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதுகுறித்து ஜோதிடன் இன் தேர்தல் பிரசார நிதிக் குழுவின் உறுப்பினர் அஜய் புடோரியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ” தேவை இல்லாமல் ஒரு சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்கள்.
கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவில் உள்ள ஆக்லாந்தில் 1964 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி பிறந்தார். 1787 ஆம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவில் பிறந்தவர்கள் அனைவரும் அமெரிக்காவின் இயற்கையான குடிமகனாக கருதப்படுவார் என்ற அரசியல் சட்டத்தின் இரண்டாவது பிரிவு கூறுகின்றது. அதனால் கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் இயற்கையான குடிமகனாகவே கருதப்படுகிறார். எனவே அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதி பற்றி எந்த ஒரு கேள்வியும் எவராலும் எழுப்ப இயலாது. அதன்மூலம் இந்த விவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகின்றது. ஒட்டுமொத்த பிர்தர் இயக்கமும் இனவெறிக்கு ஆதரவாக செயல்படுகிறது. ஜனாதிபதி அமெரிக்காவை மிகவும் இழிவுபடுத்துகிறார்” என்று அவர் கூறியுள்ளார்.