நாகர்கோவிலில் அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு முன்பாக விதிமுறைகளை மீறி தனியார் பள்ளி ஒன்றில் மாணவர் சேர்க்கை நடத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆறாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை 17-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் நாகர்கோவிலில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்த வகுப்புக்கான மாணவிகள் சேர்க்கையை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை போன்ற எந்த விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் பெற்றோரும், மாணவிகளும் ஏராளமாக குவிந்துவிட்டனர்.
இதனால் கொரோனா பரவும் அச்சம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாக மாணவர் சேர்க்கை நடத்த தனியார் பள்ளிக்கு அனுமதி அளித்தது யார் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விதிகளை மீறி செயல்பட்ட பள்ளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.