இரண்டாம் கட்டமாக முதல்வர் பழனிசாமி உடன் ஆலோசனை கூட்டம் தற்போது நடந்து வருகிறது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் தற்போது இரண்டாம் கட்டமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே முதல் கட்டமாக ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக ஆலோசனை கூட்டம் நடத்தி அதற்கு பிறகு மீண்டும் இரண்டாம் கட்டமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டம் தற்போது முடிந்த பிறகு மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்று வருகின்றது.
பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு பேசி பேசி வருகிறார்கள். தற்போது தான் அந்த ஆலோசனை கூட்டம் என்பது தொடங்கி இருக்கிறது. இரண்டாம் கட்டமாக முதல்வர் பழனிசாமி உடன் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் மற்றும் துணை முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் நடத்திய ஆலோசனையில் அவர்கள் பேசிய விஷயங்கள் குறித்து செய்தியாளர்களை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இந்த கூட்டம் முடிந்த பிறகு தான் முதல்வர் வேட்பாளர் குறித்த முடிவு தெரியவரும்.