கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தற்போது வரை கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,03,200 ஆக உள்ளது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,11,108 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை கொரோணா பாதிப்பிலிருந்து 1,26,499 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5,257 தேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 80,884 ஆக உள்ளது. மேலும் கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 104 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். அதனால் கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று புதிய உச்சமாக 7,908 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.