தமிழகம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தியது தொடர்பாக அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பொதுவெளியில் கட்சி தொண்டர்கள் ஆகட்டும், மூத்த நிர்வாகிகள் ஆகட்டும் யாரும் முதல்வர் தொடர்பாக பேச வேண்டாம். அதிமுகவை பொறுத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ… அதை மட்டும் தற்போது தொண்டர்கள் மேற்கொள்ளலாம் என்ற ஒரு அறிவுறுத்தல் ஒரு உத்தரவாக அதிமுக தலைமையிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் கையெழுத்துடன் கோரிக்கையாக இந்த அறிக்கை என்பது வெளியாக இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்ற விவாதம் எழுந்த நிலையில் தான் இன்று காலை முதல் தொடர்ச்சியாக ஆலோசனை கூட்டம் என்பது நடைபெற்றது.கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட அமைச்சர்கள் துணை முதலமைச்சர், முதலமைச்சரிடம் ஆலோசித்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற முடிவு எட்டப்படவில்லை.
தேர்தலுக்கு முன்பாக அது தொடர்பான அறிவிப்பை அதிமுக தரப்பில் இருந்து வெளியாகும் என்ப தற்கான வாய்ப்புகள் உள்ளதாகவே நிர்வாகிகள் கூறுகிறனர். இருந்த போதிலும் தற்போது நிலையில் பொதுவெளியில் எந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் முதல்வர் தொடர்பான கருத்துக்களை பதிய வேண்டாம் என்று ஒரு விஷயத்தை அதிமுக தலைமை தெளிவு படுத்த இருக்கின்றது.