கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோர்க்கு சிறை தண்டனை அல்லது 1 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் அவசர சட்டத்தை இயற்ற ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசாவில் கொரோனா பாதிப்பு 52,000- தை தண்டியுள்ளத்து. 314 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை ஒடிசா அரசு எடுத்து வருகிறது. முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறுவோருக்கு கடுமையான அபராதம் விதித்து திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தொற்று நோய் தடுப்பு சட்டத்தை திருத்தி அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது.
இதன் மூலம் கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறுவோர்க்கு குறிப்பிட்ட காலம் சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சட்டசபையை கூட்ட முடியாததால் அவசர சட்டம் பிறப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.