Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(16.08.2020)நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

16-08-2020, ஆடி 32, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00

எம கண்டம் – பகல் 12.00 – 01.30

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30

இன்றைய ராசிப்பலன் – 16.08.2020.

மேஷம்

குடும்பத்தில் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டு. தொழில் தொடர்பாக வெளி மாநிலத்தவர் நட்பு உண்டாகும். பயணங்களால் நற்பலன் கிடைக்கும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

ரிஷபம்

வியாபார தொடர்பாக கொடுக்கல் வாங்கலில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். எடுக்கும் காரியத்தில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. உற்றார் உறவினர்கள் உதவியால் பொருளாதார பிரச்சினைகள் குறையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும்.

மிதுனம்

எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராகும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். தொழில் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் வருமானம் பெருகும்.

கடகம்

பிள்ளைகளால் மன அமைதி குறையும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.

சிம்மம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். எடுக்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும்.  புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.

கன்னி

எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும்.  வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்.

துலாம்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாடு நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் குறையும்.

விருச்சிகம்

உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். மற்றவர் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.

தனுசு

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை கொடுக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும்.

மகரம்

பணவரவு அமோகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும்.

கும்பம்

செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் லாபம் அடையலாம். தெய்வ வழிபாடு நல்லது. உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும்.

மீனம்

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகும். நண்பர்களின் சந்திப்பு மனநிம்மதியை தரும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும்.

Categories

Tech |