Categories
உலக செய்திகள்

கொரோனா அறிகுறிகளின் வரிசை… விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.. மருத்துவர்கள் மகிழ்ச்சி…!!!

கொரோனா அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக உலக நாடுகள் அனைத்தும் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அது தொடர்பான ஆய்வுகளில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றின் அறிகுறிகளை வரிசைப்படுத்துவது தொடர்பான ஆய்வு ஒன்றினை அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்தியுள்ளனர். அந்த ஆய்வின் முடிவுகள் ‘பிரண்டியர்ஸ் இன் பப்ளிக் ஹெல்த்’ என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த முடிவில், கொரோனா அறிகுறிகளாக காய்ச்சல், இருமல், தலைவலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறித்து ஆய்வினை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவரான தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவம் மற்றும் உயிரி மருத்துவ இன்ஜினியரின் பேராசிரியர் பீட்டர் குன் கூறுகையில், “கொரோனா தொற்றுகளுடன் இணைந்த காய்ச்சல் போன்ற நோய்களின் அறிகுறிகளை நாம் ஒன்றுடன் ஒன்றை கொண்டிருக்கும் போது, அதன் பாதிப்பை தெரிந்துகொள்வது அவசியமாகும். கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் இந்த வரிசைப்படி அமையலாம் என்ற தற்போதைய ஆய்வு முடிவினை கொண்டு நோயாளிகளை பராமரிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மருத்துவர்கள் எளிதாக தீர்மானிக்க இயலும். நோயாளிகளின் நிலைமை மோசமாவதையும் எளிதில் தடுக்க முடியும்.

அதுமட்டுமன்றி ஆரம்பத்தில் நோயாளிகளை அடையாளம் காண்பது மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்படும் நேரத்தை குறைக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். கொரோனா தொற்றுக்கான சிறந்த அணுகுமுறைகள் ஆரம்பத்தில் இருந்ததை விட தற்போது சிறப்பாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதி வரையில் உலக சுகாதார நிறுவனத்தினால் சீனாவில் இருந்து பெறப்பட்ட குரோனா நோயாளிகள் 55 ஆயிரம் பேரின் தரவுகளை விஞ்ஞானிகள் ஆராய்ந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 29ஆம் தேதி வரையில் பெறப்பட்ட 1100 விஞ்ஞானிகளின் தரவுகளையும் ஆய்விற்கு பயன்படுத்தியுள்ளனர்.

கொரோனா அறிகுறிகள் வரிசையை இன்புளுவென்சாவுடன் ஒப்பிடுவதற்காக, 1994- 1998 காலகட்டத்தில் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்து இன்புளுவென்சா தொடர்பாக பெறப்பட்ட 2470 நோயாளிகளின் தரவுகளையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இது குறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜோசப் லார்சன் கூறுகையில், ” அறிகுறிகளின் வரிசையில் மிகவும் அவசியம். ஒவ்வொரு நோயும் வித்தியாசமாக முன்னேறுகிறது என்பதை வைத்து, ஒருவருக்கு குளம் தொட்டு இருக்கிறதா? அல்லது வேறு நோய் இருக்கிறதா? என்பதை விரைவாக மருத்துவர்களால் அடையாளம் காண இயலும்” என்று கூறியுள்ளார்.

ஆய்வு முடிவில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள முக்கிய தகவலில், ” நோயாளிகளின் மிகச்சிறிய பகுதியினர் மட்டும் தான் ஆரம்பத்தில் வயிற்றுப்போக்கை ஆரம்ப அறிகுறியாக அனுபவிக்கின்றனர். ஆரம்பத்தில் இப்படி வயிற்றுப்போக்கு அறிகுறி ஏற்படுவது கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்பதை குறிக்கின்றது. ஏனென்றால் அவர்களுக்கு வயிற்றுப் போக்கைத் தொடங்கி நிமோனியா அல்லது சுவாச கோளாறு ஏற்படுகிறது. அதிகமாக தொடக்கத்தில் கூறப்படுகின்ற அறிகுறி காய்ச்சல் மட்டுமே. அதனைத் தொடர்ந்து இருமல் அல்லது சுவாச கோளாறு ஆகியவை ஏற்படுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Categories

Tech |