மிர்ச்சியில் டாப் 20யில் நான்காம் இடத்தை துக்ளக் தர்பார் படத்தின் அண்ணாத்த சேதி பாடல் பிடித்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ள துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் அண்ணாத்த சேதி என்ற பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி அந்த பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் மிர்ச்சியில் டாப் 20 பாடல்களில் இப்படத்தின் பாடல் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், மிர்ச்சியில் டாப் 20யில் நான்காம் இடத்தை இந்த பாடல் பிடித்துள்ளது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். விஜய்சேதுபதி, பார்த்திபன், அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.