சென்னையில் உள்ள புளியந்தோப்பில் கே.பி.கார்டன் 10-வது பிளாக்கில் குடிருப்பவர் சரவணன் இவருடைய வயது 25. இவர் சமையல் கியாஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்துள்ளார். சரவணன் தனது தாயாருடன் வசித்து உள்ளார்.
இந்நிலையில் சரவணன் நேற்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் புளியந்தோப்பில் உள்ள எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை ஓரமாக சென்று கொண்டிருந்தார். அப்போது அம்பேத்கர் கல்லூரி அருகில் சென்று கொண்டிருந்த போது அங்குள்ள குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் ஏற்றிக்கொண்டு சென்ற தண்ணீர் லாரியை முந்திச்செல்ல முயன்ற போது இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவர் மீது தண்ணீர் லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியவுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து நடந்தவுடன் தண்ணீர் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞரின் உறவினர்கள், குடிநீர் வாரிய நீரேற்று நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இச் சம்பவம் குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பின்பு உயிரிழந்த சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் தண்ணீர் லாரியை பறிமுதல் செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.