அபுதாபியில் காவல்துறையின் மீட்பு பணி ஹெலிகாப்டர்களுக்கு நோயாளிகளை ஆம்புலன்சில் இருந்து சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்வதற்கு நவீன ‘ஸ்டெக்சர்’ வழங்கப்பட்டிருக்கிறது.
அபுதாபியில் விமானப் போக்குவரத்து பிரிவின் துணை இயக்குனர் ஒபைத் முகம்மது அல் ஷாமிலி இதுகுறித்து கூறுகையில், ” அமீரகத்தில் கொரோனா பரவலை முற்றிலும் தடுப்பதற்கு பல்வேறு பகுதிகளில் முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் அபுதாபியில் விபத்தில் பாதிக்கப்பட்ட அல்லது கொரோனா மருத்துவ பரிசோதனையில் பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பாக ஏர் ஆம்புலன்ஸ் எனப்படும் சிறப்பு எலிகாப்டர் சிகிச்சைக்காக அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களை மருத்துவ ஊழியர்கள் கவச உடைகளை அணிந்துகொண்டு ஸ்ட்ரெச்சரில் அழைத்துச் செல்வார்கள்.
அதில் அவர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் உம் மற்றும் ஊழியர்களுக்கும் கிருமித் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதனை கருத்தில் கொண்டு தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கேப்சூல் படுக்கைகள் போன்ற நவீன ‘ஸ்டேச்சர்’ அபுதாபியின் காவல்துறையின் மீட்பு பணி ஹெலிகாப்டர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கண்ணாடி பெட்டி போன்ற அமைப்பில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது நோயாளி உள்ளே படுக்க வைக்கப்படுவார்கள். பெட்டியின் உள்ளே அவர்களுக்கு ஆக்சிஜன் செலுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி பல்வேறு திறப்புகள் போன்ற அமைப்புகளில் இருந்து வெளியில் இருந்தபடியே நோயாளிகளை தொடாமல் பரிசோதனை மற்றும் உயிர்காக்கும் கருவிகளை பொருத்த இயலும்.
அதற்காக மூடி போன்ற அமைப்பில் கையுறைகள் நோயாளிகளை தொடும் வகையில் இருக்கின்றது. அதன்மூலம் கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்று ஏற்பட்ட நபர்களை எந்தவித தயக்கமும் இன்றி ஹெலிகாப்டரில் தகுந்த மருத்துவ பாதுகாப்புகளுடன் அழைத்துச் செல்ல முடியும். இத்தகைய நவீன காப்ஸ்யூல் படுக்கை ஸ்ட்ரெச்சர் அமைப்புடன் இருப்பதால் நோயாளிகளை ஆம்புலன்சில் இருந்து அப்படியே சிகிச்சைக்கான பகுதிக்கு அழைத்து செல்லவும் முடியும். அதன் மூலம் கிருமித் தொற்று வெளியில் பரவாமல் தடுப்பது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவருக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கவும் இயலும்” என்று அவர் கூறியுள்ளார்.