Categories
சினிமா தமிழ் சினிமா

“எஸ்பி ஒரு பலமான நேர்மறையான மனிதன்”- பிரபல பின்னணி பாடகி ட்விட்…!


பின்னணி பாடகரான எஸ்பிபி ஒரு பலமான மற்றும் நேர்மையான மனிதர் விரைவில் மீண்டு வருவார் என பிரபல பின்னணி பாடகி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் தனது குரலால் அனைவரையும் வசீகரித்தவர். அவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டு வந்துகொண்டிருந்த நிலையில் நேற்று இரவு முதல் கவலைக்கிடமாக இருப்பதாகசெய்திகள் வெளியாகின. அவரை குணப்படுத்துவதற்கு மருத்துவர்கள்தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேசமயம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகினர், இயக்குநர் என பலரும் அவரின் நலம் வேண்டி பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் எஸ் பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமாக பின்னணி பாடகி கே எஸ் சித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் ” எஸ். பி. சார் ஒரு பலமான மற்றும் நேர்மறையான மனிதர். தற்போதைய சூழலில் இருந்து அவர் மீண்டு வருவார் என நான் நம்புகிறேன். அவர் விரைவாக குணமடைய பிரார்த்தனை மேற்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |