Categories
மாநில செய்திகள்

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்…!!

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகள் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரியில்  கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல்முதல் தனுஷ்கோடி வரை கடல் அலைகள் இரண்டரை மீட்டர் உயரம் எழுப்பக் கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Categories

Tech |