தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.
தமிழகத்தில் விழா காலங்களில் சுமார் 200 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையானது வழக்கம். ஆனால் இரண்டு நாள் விடுமுறை என்பதால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 248 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகி உள்ளது. சுதந்திர தினம், ஞாயிற் முழு ஊரடங்கு காரணமாக இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக 250 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப் பட்ட நிலையில், 248 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கும் மதுபானம் விற்பனையாகி உள்ளது.
இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் 56. 45 கோடி ரூபாயும், திருச்சி மண்டலத்தில் 55 கோடி ரூபாய்க்கும், சேலம் மண்டலத்தில் 54.6 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது. கோவை மண்டலத்தில் 49.78 கோடி ரூபாய்க்கும், சென்னை மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 31.50 ரூபாயும் வசூலாகியுள்ளது.