சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. ஆனால் சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கின்றது. அதனால் அந்த நாட்டில் விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாடுகள் அனைத்தும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா வின் இரண்டாவது அலை தொடங்கியுள்ளது.
அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. மேலும் 57 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட 22 பேரில் 8 பேர் உள்ளூர்வாசிகள் என்றும் மற்றவர்கள் அனைவரும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. அந்த எட்டுப் பேரில் பெரும்பாலானோர் சீனாவின் வடமேற்கு பகுதியான ஜின்ஜியாங்கை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சீனாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 84,808 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 4,634 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
மேலும் சீனாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த அவர் களின் எண்ணிக்கை 79,519 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து சீனாவிற்கு வந்தவர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு களின் எண்ணிக்கை 2,263 ஆக இருக்கின்றது. அதுமட்டுமன்றி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அறிகுறிகள் இல்லாமல் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 13 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். தற்போது வரை 300 பேர் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.