நாளை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் நிலையில் சென்னை காசிமேட்டில் மீன்களை வாங்க சமூக விலகலை மறந்து ஏராளமானோர் குவிந்தனர்.
7-ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆகஸ்ட் மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை அசைவ பிரியர்கள் அம்மானுக்கு இறைச்சி, மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை வைத்து வழிபடுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்குவதற்காக அதிகாலை 2 மணி முதலே வியாபாரிகள் குவிய தொடங்கினர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டன. தடுப்புகள் அமைத்தும், முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் மீன்களை விற்க ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வருகின்றனர். குறைந்த அளவே மீன்களின் வரத்து இருப்பதால் விலை அதிகரித்து காணப்படுகிறது.