Categories
தேசிய செய்திகள்

கேரளாவில்… இன்று மட்டும்… 1608 பேருக்கு கொரோனா… முதல்வர் அலுவலகம் அறிவிப்பு..!!

இன்று ஒரே நாளில் கேரளாவில் 1608 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது என முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று மேலும் 1,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் ஒரே நாளில் 1,608 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 42,885 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கேரளாவில் இன்று ஒரே நாளில் 803 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  மேலும் இன்று ஒரே நாளில் 7 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 14,891  பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவில் இருந்து 27,779 பேர் குணமடைந்துள்ளனர்” என தெரிவித்துள்ளது.

Categories

Tech |