குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதியில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை கடல் அலைகள் இரண்டரை மீட்டர் உயரம் வரை எழும்பக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.