Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப ராசிக்கு…அலைச்சல் உண்டாகும்…சேமிப்பு கரையும்…!

ரிஷப ராசி அன்பர்களே …!    இன்று  எதிர்பாராத புதிய பொறுப்பை ஏற்க நேரிடும். தொழில் வியாபாரம் மந்த கதியில் இயங்கும். லாபம் சுமாராக இருக்கும். திடீர் செலவு சேமிப்பு கரையும். பெண்களுக்கு சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமரசப் பேச்சுவார்த்தையில் நிதானத்தை பின்பற்ற வேண்டும். எதிலும் எச்சரிக்கையுடன் பயணம் செல்ல வேண்டியிருக்கும். அலைச்சல் உண்டாகும்.

எதிர்பார்த்த காரியம் வெற்றிகரமாக நடந்து முடியும். அதற்காக கடுமையாக நீங்கள் முயற்சிக்க வேண்டும். பண வரவு சீராகவே இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த தனவரவும் கையில் வந்து சேரும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உருவாகும். உடல் ஆரோக்கியமும் நல்லபடியாகவே இருக்கும். நண்பர்களுக்கும் எந்த விதத்திலும் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

வீண் அலைச்சல் மட்டும் கண்டிப்பாக குறைக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |