தோனியின் ஓய்வு குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் தோனி. தோனி வருவதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா வசம் இருந்த கிரிக்கெட் தோனி வந்தபின்பு இந்தியா பக்கமும் மாறியது. கிரிக்கெட் என்றாலே அது ஆஸ்திரேலியா தான் என்று கூறிவந்த நிலையில், பல்வேறு வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுக்கொடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சரி நிகராக போட்டியிடுவதற்கு ஒரு நாடு இருக்கிறது என்றால் அது இந்தியாதான் என பெருமிதமாக சொல்ல வைத்தவர் தோனி.
இதை மையமாக வைத்து BCCI தோனி ஓய்வு குறித்து கருத்து தெரிவித்துள்ளது. அதில், தனது அமைதியான குணத்தாலும் ஆட்டத்தை புரிந்துகொள்ளும் திறனாலும் இந்திய கிரிக்கெட்டின் முகத்தை மாற்றியவர் மகேந்திரசிங் தோனி. என தோனி ஓய்வு குறித்து பிசிசிஐ புகழாரம் சூட்டியுள்ளது. மேலும் சக கிரிக்கெட் நட்சத்திரங்கள், சினிமா, அரசியல் பிரபலங்களும் தோனிக்கு தொடர்ந்து புகழாரம் சூட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.