ரஷ்யாவின் தடுப்பூசி குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றை WHO வின் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் தொடர்ந்து பல சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இதற்கு தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டால், இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் என நினைத்து அதற்கான பணிகளில் உலக நாடுகள் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில்,
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் போட்டி போட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசியை முதற்கட்டமாக கண்டுபிடித்து விட்டதாக, கடந்த வாரம் ரஷ்யா அறிவித்தது. ஆனால் மூன்றாம் கட்ட பரிசோதனை விவரங்களை தெரிவிக்காமல் ரஷ்யா மறைப்பதாக உலக நாடுகள் குற்றம்சாட்டின. இந்நிலையில் தங்களிடம் பரிசோதனையில் உள்ள ஒன்பது தடுப்பூசிகளில் ரஷ்யாவின் தடுப்பூசி இல்லை என்ற அதிர்ச்சித் தகவலை WHO வின் தலைமை இயக்குனர் டாக்டர் ப்ரூஸ் அயல்வார்டு தெரிவித்துள்ளார்.