கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தின் மூன்றாவது முழு ஊரடங்கு இன்று அமல்படுத்தப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிறு கிழமைகளில் எவ்வித தளர்வுமின்றி முழு அளவில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
முழு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவசியமின்றி சாலைகளில் வாகனங்களில் சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். மருந்து, பல உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.