Categories
சற்றுமுன் மாநில செய்திகள் விளையாட்டு

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை- முதல்வர் எடப்பாடி ட்விட்

தோனியின் புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ட்விட் செய்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுமொத்த ரசிகர்களும் ஹாஷ்டாக் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தோனியின் ஓய்வுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்து வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யும் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனி ஓய்வு குறித்து , இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தோனி புகழ் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாகும். சர்வதேச போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய தோனியின் பெயர் வரலாற்றில் பொறிக்கப்படும். மூன்றுவிதமான ஐசிசி கோப்பை வென்ற கூல் கேப்டன், கூல் தோனியின் பெயர் நினைவில் இருக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ட்விட் செய்துள்ளார்.

Categories

Tech |