- புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா பெற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மேலும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் புதுச்சேரியில் ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,355 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1,853 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இருந்து வருகின்றனர். மேலும் 1,172 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுவரை 106 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை முடிந்து இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,224 ஆக அதிகரித்துள்ளது என புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.